தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தம் வரையில் போராடியதாகவும் இலங்கை இராணுவத்தினால் காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என முன்னாள் போராளிகள் சிலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் பழ நெடுமாரன் தெரிவித்த கருத்திற்கு பின்னர் உலகலாவியரீதியில் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா அல்லது இல்லையா? என்பது தொடர்பில் பலரும் கருத்துக்களை வௌியிட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.