Date:

பிரபாகரன் தொடர்பில் இரா.சாணக்கியன் தெரிவித்த முக்கிய கருத்து

பிரபாகரன் உயிரோடு இருந்தால் அது தொடர்பான செய்தி அதிரடியாக தான் வரும் என்பது தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அண்மையில் பழ நெடுமாறன் கருத்தொன்றை இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான கருத்துக்களை ஒவ்வொருவரும் மாறி மாறி போடுகின்றமை வழமை தெரிவிப்பது வழமையான விடயம் தான் என்றும்.

பிரபாகரன் உயிரோடு இருந்தால் நேரடியாக வந்து அவர் அதை மக்களுக்கு சொல்வார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மேலும், பிக்குமார் அரசியலமைப்பை எரிக்கிறார்கள். எரித்த பிக்குவை சுட்டதாக அவர் ஊடக சந்திப்பொன்றை நடத்துகின்றனர்.

அரசியலமைப்பை எரித்த பிக்கு தன்னை சுட வந்ததாக கண்ணீர்விட்டு அழுகிறார். அதேநேரத்தில் இப்படியான ஒரு செய்தி வருகிறது. இவை அனைத்தையும் அவதானித்து நாம் தெளிவாக ஆராய வேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கிய விதத்தை வைத்து இந்த விடயத்தை சொல்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...