மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த பிரேரனைக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக மின் கட்டண அதிகரிப்புக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரி 02 ஆம் திகதி மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில்,பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.