எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம் அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஆள் அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதம் என்பனவற்றை இதற்காக சமர்ப்பிக்க முடியும்.