நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் திறந்த நீதிமன்றில் அழைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று இந்த மனுவை தாக்கல் செய்தனர். குறித்த மனு கடந்த வெள்ளிக்கிழமை எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.