ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.
அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து சேவைகளே இன்றைய தினம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தத்தமது பிரத்தியேக பயணங்களை மேற்கொள்வோர் என பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், உரிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலை அடுத்து, ரயில் இயந்திர சாரதிகளின் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.