புளத்சிங்கள ஹொரண வீதியில் கோவின்ன சல்கஸ் சந்தியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர பெரேரா என்பவரே இவ்வனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் மேலும் இருவருடன் மோட்டார் சைக்கிள்களில் ஹொரண பிரதேசத்திலிருந்து புளத்சிங்கள நோக்கி பயணித்த போது மத்துகமவில் இருந்து ஹொரணை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ள தாகவும், சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.