தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் வாக்குரிமையை காப்பாற்றுவதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவிற்குள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ளதால் இந்த நடவடிக்கை தொடர்பில் உத்தரவுகள் அவசியமற்றது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.