பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் நாளை (10) நள்ளிரவு 12 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தொடரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரயில் திணைக்களத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில், மேலதிக நேரக் குறைப்பு, தொடரூந்து சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு அநியாயமான வரி விதிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சாரதிகளின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடரூந்து பொது முகாமையாளரிடம் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்த போதிலும், இதுவரை சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.