கினிகத்தேனை பிரதேசத்தில் வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பல நாட்களாக வீட்டை விட்டு வௌியில் வராத நிலையில், பிரதேசவாசிகள் சந்தேகத்தின் பெயரில் சென்று பார்த்த போது இவர்கள் படுக்கை அறையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் கொழும்பில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.