தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எந்த நாட்டில் ஏற்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவல் சற்று இலங்கை மக்களையும் பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் கடந்த மூன்று நாட்களாக உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதேபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதியே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி பகுதியில் ஏற்படும் என்று துல்லியமாக கணித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் இவர்பக்கம் திரும்ப தொடங்கியுள்ளது.
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.