கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும்,குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.