ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அனைத்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனு அண்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ஹஜ்ஜுல் அக்பர் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்ள தாம் ஏற்கனவே பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனையடுத்தே இன்று அவர் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.