நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஆமர்வீதியிலுள்ள பிரைட்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய, வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள் – கொழும்பு நிருபர் நஸார்