12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை சூத்திரத்திற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.
எப்படியிருப்பினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 முதல் 400 ரூபாவினால் மாத்திரம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 92 பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.