ரயில்களை இயக்க தேவையான பணியாளர்கள் இல்லாததால் கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 153 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் எனப் பலர் ஓய்வு பெற்றதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை காரணமாக கடந்த நான்கு நாட்களாக பெரும்பாலான ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அசெகரிங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி 27 பயணிகள் ரயில்கள் மற்றும் 09 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் என 36 ரயில் பயணங்கள், கடந்த 29ம் திகதி 29 பயணிகள் ரயில்களும், 15 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்களும் 44 ரயில் பயணங்கள், 30ம் திகதி 36 பயணிகள் ரயில்களும், 7 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் 43 ரயில் பயணங்களும் நேற்று 31ம் திகதி 22 பயணிகள் ரயில்கள் மற்றும் 08 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் 30 இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் நாட்டில் பாரிய எண்ணெய் தேவை மற்றும் பயணிகளின் நாளாந்த நடவடிக்கைக்கு தேவையான சேவை இல்லை என்றால் எதிர்வரும் நாட்களில் பாரிய அசௌகரிகங்ளுக்கு முகம் கொடுக்கநெரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.