மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியின் 8ஆவது ஒழுங்கையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் இரண்டு மாடி வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீயை கட்டுப்படுத்த தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.