நாடு முழுவதும் இன்று (30) முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின் படி, நாளையதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.