தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ 112 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி மற்றும் சாரதியின் உதவியாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த இடத்தில் வேகமாகவந்த கார் விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளது.
இதில் பயணித்த இரு இந்திய நாட்டு பிரஜைகளும் விபத்துக்குள்ளானதுடன்
அவர்களும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.