தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர் முகப்புத்தகத்தில் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். “ஆணைக்குழுவின் செயல்பாடுகளுக்கு மூன்று உறுப்பினர்கள் போதுமானவர்கள் என்றும், ஒருவரின் பதவி விலகலால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்டாது”
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து நேற்று (25) இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.