நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்.
53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ஒன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்,
01:- அப்துல் ரஹீம் (55) 02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13) 04:- நபீஹா (08) 05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (வான் சாரதி)
07:- சன்முகராஜ் (25) (ஆட்டோ சாரதி)