Date:

Update: நானுஓயா விபத்து – இன்று காலை ஸ்தலத்தில் எமது நிருபர் எடுத்த புகைப்படம் மற்றும் தகவல்கள்

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் முச்சக்ககர வன்டியொன்றும் மோதி விபத்துள்ளாகினதில் 7 பேர் ஸ்தலத்திலே உயிரிலந்துள்ளதுடன் 53 மாணவர்கள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் ,மற்றொருவர் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமாக 7 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக. நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் வேனில் பயணம் செய்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஆண் ஒருவருமாவார்.

இந்த பேருந்து நானுஓயா குறுக்கு வீதியில் சமர் செட் பகுதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,
தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த நானுஓயாவை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

இந்த பேருந்தில் பயணித்த கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த 53 மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளா கியுள்ளது இவர்களில் காயங்களிற்கு உள்ளானவர்களை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வருவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் சிறிது நேரம் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டது.

நானுஓயா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது .

 

செ.திவாகரன் நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...