ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி வீதி (லோட்டஸ் சர்க்கஸ்) மற்றும் கொழும்பு சுதந்திர மாவத்தை இன்று (20) மூடப்பட்டுள்ளன.
வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக கொழும்பில் பல வீதிகள் இன்று (20) முற்றாக மூடப்பட்டுள்ளன.