பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்கள் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலையை காணக்கூடியதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.