சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி உலமா சபைத் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக பலந்து கொள்வதோடு கௌரவ அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்கிறார்.
உலமாக்கள் அப்பணிகளை கட்டுக்கோப்புடன் மேற்கொள்வதற்கு காலியில் அமைந்துள்ள பஹ்ஜத்துல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரியில் 1924 ஆம் ஆண்டு மார்க்க அறிஞர்களால் உருவாக்கப்பட்ட உலமா சபை, 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பில் 8300 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் உலமா சபையின் மாநாட்டை சிறப்பாக நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவைப் பார்வையிட பின்வரும் இணைப்பினூடாக இணையுங்கள்…