Date:

பாடசாலைகளுக்கான நாளைய விடுமுறை தொடர்பாக விசேட அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளைய தினம்  விடுமுறை வழங்கப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார்  மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தைப்பொங்கல் என்பதால், நாளை திங்கள் கிழமை(16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்வதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், மூன்றாம் தவணை விடுமுறை 3 கட்டங்களாக வழங்கப்பட்டுவருவதை கருத்திற்கொண்டு, நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளைய தினம் வழமைபோல பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம்...

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...