Date:

breaking : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு வௌியானது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி,பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபாவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...