மைத்திரி, விமல் மற்றும் டலஸ் ஆகியோரின் தலைமைத்துவத்திலான ஹெலிகொப்டர் சின்னத்தில் ‘சுதந்திர மக்கள் முன்னணி’ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (11) மாலை உதயமாகவுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பிரதான அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் பொதுச் சின்னத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.