ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் எதிர்வரும் இரண்டு தினங்களில் அந்த பணிகள் நிறைவடையும்.
இதனை அடுத்து சில நாட்களில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.