வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் ஜனனம் அறக்கட்டளையின் அனுசரணையில் இன்றையதினம் பாடசாலை மட்டத்தில் முதல் முறையாக டெக் போல் எனும் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனனம் அறக்கட்டளையின் நிறுவனரும் IDM Nations Campus இன் ஸ்தாபக தலைவரும் டெக் போல் சம்மேளனத்தின் தலைவருமாகிய கலாநிதி. ஜனகன் விநாயகர் மூர்த்தியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் டெக் போல் சம்மேளத்தின் தலைவர் திரு காமணி ஜெயசிங்க, ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளர் அதிவணகத்துகுரிய பிதா/ அருட்கலாநிதி. சந்துரு பெர்னாண்டோ மற்றும் திரு .ரஞ்சித் திரு. காமினி திசாநாயக்க திரு. மயூரன் ஜனனம் அறக்கட்டளையின் திட்டமிடல் இணைப்பாளர தி.ரு.ஏ. டி. முரளி ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.