Date:

பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 2022

பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 29.12.2022 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலே(BMICH) நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் S.J.யோகராஜா(PhD) (மொழியியல் துறை ,களனி பல்கலைக்கழகத்தின்முன்னாள் தலைவரும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பதில் தலைவரும் )
சிறப்பு விருந்தினர்களாக Dr.ஹல்ஹாரி நெத்ராஞ்ஞனி பிட்டிகல (PhD) மூத்த விரிவுரையாளர்&ஆய்வுத்துறை மேற்பார்வையாளர KAATSU International University
Dr.Sir W.A. தேசபிரிய சாம் விஜெயதுங்க(சமாதான தூதுவர் Director General-SUNFO Global Federation)

Dr.T விமலன்(கவுன்சில் உறுபினர் யாழ் பல்கலைகழகம்
Mr. R. உதயகுமார் மாகாணப் பணிப்பாளர்,கல்வி பணிமனை கொழும்பு
Mr.றுசைட் கபீப்(MBA), Mr.S.முரளிதரன்(SLEAS), Mr.ஆதம் மெத்வேதிவ்(University of Ukraine-Ukraine, Ms.இர்யான குஷ்னரோவா(University of Ukrain-Ukraine- Consultant-amazon College) Ms.நடாலியா மொரசோவா(Financial Consultant-Russia Consultant-amazon College)

மேலும் அமேசன் கல்லூரியின் டிப்லோமா,பட்டதாரி மாணவர்களின் பட்டமளிப்புடன் விரிவுரையாளர்களுக்கும்,பங்குதார நிறுவனங்களுக்கும்,அமேசன் கல்லூரியின் ஊழியர்களுக்கும் விசேட நினைவுச்சின்னம் அமேசன் உயர்கள்வி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு இல்ஹாம் மரைகாரினால் வழங்கி வைக்கபட்டது இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 220 மாணவர்கள் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

இதில் ஆசிரியர் பயிற்சி நெறி,உளவியலும் உளவளத்துனணயும்,தகவல் தொழிநுட்பம்,கணக்கியல் போன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல்,மாணவர்களுகிடையே சுயவேலைத்திட்டங்கள்,(Individual Project) பயிற்சி பட்டறைகள்(Practical Workshops),வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல்(Foreign Students exchange),பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கைசாத்திட்டு மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தி அனுப்புகின்றமை விசேட அம்சமாகும்.

எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைபடுகின்ற தொழிற்துறை களுடன் தொடர்புடைய பாடநெறிகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கபடவுள்ளதாக அமேசன் உயர்கல்வி பணிப்பாளர் திரு இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார் இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது.

ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
கற்றவன் எந்த இடத்திற்க்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்க்கு காரணம் அவன் கற்ற கல்வியே.

கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இப்படிப்பட்ட மகோன்னத துரையை தெரிவு செய்தமையும் இதனாலேயாகும்.அதாலேயேதான் இன்னும் கற்றுக்கொண்டிருப்பதாக தனது உரையில் தெரிவித்தார்.இப்படிப்பட்ட துறைக்கு பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி யளிப்பதாகவும் .

ஒவ்வரு வீட்டிலும் பல கல்விமான்கள் ‘ பட்டதாரிகளை உருவாக்குவது தனது தூரநோக்கு திட்டமெனவும் தெரிவித்தார் அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி பல சமூக சேவைகளையும்,பல இலவச புலமைபரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

அமேசன் உயர்கல்வி நிறவனமானது தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சின் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனத்தினால்(P01/0854)பதியப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்.மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்களுடனும்,பல்கலைக்கழகங்களுடனும் இனணந்து செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. இவர்களின் அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகும் (UGC Recognized )
விசேடமான பாடநெறிகளாவன


Diploma/HND/BA In Teacher Training
Diploma/HND/BA/BED/In Montessori & Child Care Education
Diploma/HND/BA/BSc In psychology& counselling
Diploma/HND/BA In Child Psychology
Diploma/HND/BA In Business Management
Diploma/HND/BA In English language
Diploma In Childcare
Diploma/HND/BA In Hotel Management
பிரதம அதீதி பேராசிரியர் S.J யோகராஜா தனது விசேட உரையில் கல்வி என்பது இக்கால கட்டத்தில் இலகுவாக வும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகவுள்ளது என்றும் அதற்காக நாம் காலங்களும் நேரங்களையும் ஒதுக்கி பல தியாகங்களை செய்வதன் மூலமமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எத்தகைய சவால்கள் எதிர்காலத்தில் வந்த போதிலும் நாம் பெற்ற கல்வியின் மூலமாக சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்டிக்கர் ஒட்டியவர் விடுவிக்கப்பட்டது இதனால் தான் – ஹர்ஷ

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22...

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட...

அமெரிக்க வரி குறித்த சர்வ கட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி...

கைதின் பின் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்கமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373