Date:

பிரபல தொகுப்பாளர் மரணம்

90-களில் சிறுவர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன்.

இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் தொடரில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று(16)  இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...