இன்று முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயு தற்போது 4,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.