இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயினால் விஷமூட்டப்பட்ட இரண்டு பிள்ளைகளில் 5 வயதுச் சிறுவன், கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
விஷம் அருந்திய 8 வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.