Date:

பஸ் கட்டணம் குறைப்பு தொடர்பான தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

அதுவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.

இதேவேளை டீசல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி, ரூ.420 ஆக இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை ரூ.405 ஆக இருக்கும்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ​​ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த காலப்பகுதியில் டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...