Date:

திருமணம் நிகழ்வுகளுக்கு இன்று முதல் தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பதிவு திருமணத்தை நடத்துவதாயின் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும். இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

    Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்...

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...