Date:

தாய் செலுத்திய முச்சக்கர வண்டி பஸ்ஸுடன் விபத்து; மகள் பலி

பதுளை, கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் ஏழு வயது சிறுமி பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் உள்ளிட்ட மூன்று பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கஹட்டரூப்பவில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் அம்பிட்டிய பகுதியிலிருந்து முத்துமால பகுதிக்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் அம்பிட்டிய சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திய பெண் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பலியாகியுள்ள சிறுமியின் தாயாரே முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் உட்பட மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணித்த சிறுமி முத்துமால கொவிபொல கெந்தகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பேருந்தின் சாரதி கஹட்டரூப்ப பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டரூப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு தட்டுப்பாடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...