சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும். அவர்களின் கொவிட்-19 மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும்வெளிநாடுகளில் கொவிட்-19 பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இந்திய அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான எக்டிஜன் பரிசோதனை மற்றும் கொவிட் பிரத்தியோக வைத்தியசாலைகளில் கொவிட் தொற்று தாக்கம் ஏற்பட்ட அதற்கான முன்னாயத்த நடவடிக்கை என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.