Date:

எரிபொருள் விலை குறையுமா?

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் காலண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான அளவு குறைவு, QR முறைப்படி மட்டும் எரிபொருளை விடுவித்தல், எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க நுகர்வோர்கள் முயற்சி எடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் எரிபொருளின் தேவை குறைந்துள்ளது.
முன்னதாக மாதாந்தம் சுமார் 400 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசல் தேவை இருந்த நிலையில் தற்போது அது 2000 மெட்ரிக் தொன்களாக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாத காலத்தில் தினசரி டீசல் பயன்பாடு 6496 இல் இருந்து 2999 தொன்னாகவும் பெற்றோல் பயன்பாடு 3764 இல் இருந்து 1226 தொன்னாகவும் குறைந்துள்ளது.
அதனுடன் ஒப்பிடும் போது வருட இறுதியில் நாட்டில் எரிபொருளுக்கான தேவை மேலும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள்ளதுடன் உலக சந்தையில் எரிபொருள் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.
இலங்கையில் உரிய எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது ஒரு லிட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...