Date:

வத்தளை ஹெந்தல  சந்தியில் பொலிஸார் மீது தாக்குதல்

வத்தளை ஹெந்தல  சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு  இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய  குற்றச்சாட்டில்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது  முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவர் மதுபோதையில் இருந்ததால் சாரதியைக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டுள்ளனர்.

அப்போது, முச்சக்கரவண்டியில் வந்த மற்றைய இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து  தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு  அறிவித்ததையடுத்து மற்றுமொரு பொலிஸ்  குழுவினர் முச்சக்கரவண்டியை கைப்பற்றியதுடன்  சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்தனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மாபோல பிரதேசத்தில் வசிக்கும்  25, 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...