தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குருந்துகஹஹெத்கெம மற்றும் பத்தேகம இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுற்றுலாவுக்குச் சென்ற பஸ் லொறியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.