இந்தியாவில் இடம்பெற்ற கடந்த மூன்று தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தேசியக் கட்சிகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது.
இந்தியாவின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றிபார்க்கலாம். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பாரிய சரிவினை சந்தித்துள்ளது.
முக்கியமாக டெல்லி மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்விகளால் கட்சி பாரிய சரிவை சந்தித்துள்ளது என மாநில கட்சியின் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தல் காலத்தில், ஒரு மாநிலத்தில் மோடியின் பெயர் தாக்கம் செலுத்தினாலும் இமாச்சல் பிரதேசத்தில் மோடியின் பெயருக்கு அவ்வாறான ஒருநிலை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்தாண்டு 2023ஆம் ஆண்டு கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் பாஜகவின் வாக்கு வங்கி குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Source – Shekhar Gupta: Is Modi Magic on The Decline? – Rediff.com India News