மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விரிவான அறிக்கையொன்று அமைச்சரவைக்கு கையளிக்கப்படும் என்றார்.
கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு 45 – 46 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டண உயர்வு 56.90 ஆக அமையும் என அவர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
“அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், அநேகமாக 2023 ஜனவரி 2ஆம் திகதி, மின்கட்டண உயர்வு ஏன் தேவைப்படுகிறது, எந்த விதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான அறிக்கை மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும். மேலும் 2023 ஜனவரியில் விலை திருத்தம் கண்டிப்பாக நடைபெறும்” எனவும் அவர் கூறினார்.