சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன்வழங்கியவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் குழப்பமான நிலை காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கிடைப்பது ஜனவரிக்கு அப்பாலும் தாமதமாகலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2022 முடிவடைவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைக்கலாம் என இலங்கை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர் அதன் பின்னர் ஜனவரியில் கிடைக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
இலங்கை சர்வதேச சந்தையில் டொலர் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் காலம் அவசியமானது.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டிற்கு முன்னர் இந்த நிதியுதவியை பெறுவதற்காக எங்களால் முடிந்தளவு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்கதெரிவித்துள்ளார்