இந்திய இராணுவ படைதளத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த இந்திய இராணுவத் தளத்தில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்திய நிர்வாக பகுதியான காஷ்மீர் வழியாக செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதியை மறைத்து இந்த ஆர்ப்பாட்டதை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகருக்கு தெற்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய படைதளத்தின் நுழைவாயிலுக்கு முன்னதாக இராணுவ பாதுகாவலாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஜோரியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்வத்தில் சுரிந்தர் குமார் மற்றும் கமல் கிஷோர் என்பவர்களே உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் மூன்றாவது நபர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் இடம் பெற்று சில மணித்தியாளங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தும் இராணுவத் தளத்தின் மீது கற்களை வீசியும் போட்டத்தை முன்னெடுத்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
SOURCE: AL JAZEERA AND NEWS AGENCIES
Protesters block Kashmir highway after two shot dead at army camp | Conflict News | Al Jazeera