சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளமை சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் தற்போது அதிகளவு கொரோனா நோயாளர்கள் சீனாவிலேயே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில மாதங்களில் 800 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.