தென்னிந்திய நகரமான கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ்கூறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் முகமது யூனுஸ் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.
அவருக்கு நோய் தாக்கம் ஏற்படுவது போன்று காணப்பட அவரை வைத்தியசாலை செல்ல அவருக்கு வைத்தியர்கள் அஸ்பெஸ்டாஸ் தூசி (asbestosis) அவரது நுரையீரலை அடைத்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
யூனுசுக்கு காசநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அவர் 2021 ஆம் ஆண்டில் தனது 59 ஆவது வயதில் இயற்கை ஏய்தினார்.
குறித்த தொழிற்சாலையில் உள்ள நிறுவன குடியிருப்பில் யூனுஸுடன் வசித்து வந்த அவரது மனைவி மற்றும் இரண்டு சகோதரிகள் கல்நார் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் நோயினால் பாதிக்கப்பட்ட யூனுஸூக்கு பிரிட்டிஷ் அஸ்பெஸ்டாஸ் நிறுவனமான டர்னர் மற்றும் நியூவால் அமைத்த அறக்கட்டளை நிதியிலிருந்து குடும்பம் இழப்பீடு வழங்கப்பட்டன.
இருப்பினும் குறித்த இழப்பீடு காரணமாக தனது தந்தையை மீட்டெடுக்க முடியுமா? என அவரது மகன் சலுதீன் யூனுஸ் கேள்வி எழுப்புகின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “போனது போய்விட்டது, எங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், உயிருடன் இருப்பவர்களுக்கு எவ்வளவு மோசமான விடங்கள் வரக்கூடும்.” என்றார்.
உலகத்தின் அஸ்பெஸ்டாஸ் நோய்களின் தலைநகராக இந்தியா மாறிவிடுமோ என்ற அச்சம் தோற்றுவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தேசிய கட்டுப்பாட்டாளர்களால் மனிதனுக்கு புற்றுநோயை தோற்றுவிக்கம் வழியாக அஸ்பெஸ்டாஸ் காணப்படுகின்றது.அஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டுக்கு 69 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்நார் அகழ்விற்கு 1993 ஆம் ஆண்டில் தடைசெய்திருந்த போதிலும் எந்த நாட்டையும் விட அதிக நச்சு கனிமத்தை இறக்குமதி செய்கிறது.
சர்வதேச நாடுகளிடம் இருந்து 2021 ஆம் ஆண்டில், உலகளாவிய இறக்குமதியில் இந்தியா 44% ஆக இருந்தது, 2020 இல் 29% அதிகரிக்கப்பட்டுள்ளது.