பல்கலைகழகங்களில் தற்போது கல்வி பயிலும் மாணவ பிக்குகள் தீவிரவாதி சஹ்ரான் போன்று தலைமுடி, தாடி வளர்த்து தலிபான் கோட்பாட்டின் படி காணப்படுகிறார்கள் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் இறந்துவிட்டார், அதன் பிறகு பலர் சஹ்ரானை போன்று தாமும் மாற ஆரம்பித்து தாடி வளர்க்கின்றனர். மேலும், நமது பல்கலைக்கழகங்களில் மாணவர் பிக்குகள் முடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாணவ பிக்குகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வருடங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரை பீடாதிபதி வலவாஹங்குனவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.