Date:

கொள்ளுப்பிட்டி விபத்து :டுபாய்க்கு தப்பிச்சென்ற கார் சாரதி பிணை

கடந்த சனிக்கிழமை (10)  கொள்ளுப்பிட்டியில்  விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு, டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்து பின்னர் கைதான 24 வயதான கார் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை (10)  விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்து குறித்த சந்தேகநபர் நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு விடுதியொன்றிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று  கொள்ளுப்பிட்டியில் முச்சக்கர வண்டியொன்றின்மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்தமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...