இந்தியாவில் பழைய ஒய்வூதியதிட்டத்தை மீட்டெடுப்பது இந்தியாவில் நிதி
உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால சந்ததியினருக்கு வளங்கள் மற்றும் பொறுப்புகளை சுமத்துவதற்கு
முன்னர் இந்திய மாநில அரசுகள் தற்போதைய திட்டமிடப்பட்ட வருவாய்
தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அண்மையில் இந்திய அரசின் அறிவிப்பின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்
கீழ் உள்ள பணியாளர்கள், ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஊனமுற்றாலோ
அல்லது இறந்தாலோ, அவர்களுக்கு அல்லது அவர்களது குடும்ப
உறவினர்களுக்கான அந்த நன்மைகள் வழங்கப்படுகின்றது.
இருப்பினும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு
அல்லது அவர்களது குடும்ப உறவினர்களுக்கான அந்த நன்மை பகிப்பதாக
இல்லை. இதனால் இந்திய அரச ஊழியர்கள் மத்தியில் பாரிய தாக்தை
ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தவிர்த, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும்
ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS)
திரும்புவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் இமாச்சல் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தலில்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முன்னெடுப்போம் என தேர்தல்
பிரச்சாரங்கள் முன்னெடுத்த காங்கிரஸ் கட்சிக்கு பாரிய வெற்றிகள்
கிடைத்ததாகபல்வேறுபட்ட தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
news source:
Pension or tension scheme? Restoration of OPS will lead to fiscal instability (theprint.in)